யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட காராளபிள்ளை பத்மநாதன் அவர்கள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காரளபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தப்பு இராசகிளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இராசதேவி, பரமேஸ்வரி(இலங்கை), தனலட்சுமி(தனம்- இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நிரஞ்சன்(கனடா), நிஷாந்தினி(பிரான்ஸ்), ஜயந்தினி(லண்டன்), ஜயசுதன்(பிரான்ஸ்), யாழினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாமினா(கனடா), கனகேந்திரன்(பிரான்ஸ்),வாசீகன்(லண்டன்), சர்மிளா(பிரான்ஸ்), திருவரங்கன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதிலாஷன், யுவதிக்கா, கணாதிபன்(பிரான்ஸ்), சமிக்கா, விசாகன்(லண்டன்),பிரித்திகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
கரிகாலன், அநபாயன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-02-2021 புதன் கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.