
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கபிரியல்பிள்ளை கியோமர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே”
அன்னையாய் தந்தையாய் ஒற்றைக்காலில்
உங்கள் தோள்மீது சுமந்த உத்தமரே- அப்பா
உங்கள் முகம் பார்த்து
பாசமான கதை கேட்டு
ஆகிவிட்டதோ- ஓராண்டு
அழுது புலம்புகிறோம்- அப்பா
குண்டடிபட்டார் தப்பிவிட்டார்
கதை கேட்டோம்- ஆனால்
விழுந்து விட்டார்- உயிர்
விட்டு விட்டார்- நெஞ்சம் வெடித்ததையா
கியோமர் மாமா என எல்லோரும்- அழைத்தோம்
ஓடி ஓடி உதவினிரே- பரிதவிக்கின்றோம் மாமா
கடமைகள் முடிந்தது என எண்ணித்தான்
அம்மாவோடு ஒன்றாய் வாழ்வதற்காய்
சென்று விட்டீரோ- வானுலகம்
ஓராண்டெண்ண ஓராயிரம் ஆண்டுகளாயினும்
மறவோம் மறவோம்- உங்களை
நினைப்போம் நினைப்போம்- எங்கள்
உயிர் உள்ளவரை
உங்கள் ஆத்மா இறைபதம்
அடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!