யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியல்பிள்ளை கியோமர் அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியல்பிள்ளை திரெசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோசவ், மதலேனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற றோசாறி அவர்களின் அன்புக் கணவரும்,
றொஷாணி, GG.Bosco(றமணன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகன், ஜீவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஷல்(Axel), ஆர்வின், எய்டன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான மாகிரெற், றோசலின் மற்றும் அல்பிரட், பாலசிங்கம், பெல்மன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சூசையப்பூ, பெர்னாண்டோ, அன்னம்மா, கிறிஸ்ரின், துரை மற்றும் பிலோமினா, துரைமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-08-2024 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பாசையூரில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சியேஞ்சி மாதா சேமக்காலையில் அடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details