யாழ். புங்குடுதீவு 5ம் வட்டார்த்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியின் Lampertheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காந்திமதி சோமலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
"இறப்பு வந்தாலும் நினைவு இறக்காது; கண்ணீர் வந்தாலும் அன்பு கரையாது."
ஆருயிர் அன்னையே…
மாதம் ஒன்று ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...
நாட்கள் 31 கடந்தும்
மீளவில்லை
உங்கள் நினைவில்
இருந்து தாயே
அம்மா உங்கள் கடமைகளை
மிகவிரைவில்
முடித்துக்கொண்டு
எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு
அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!
எவ்வளவு காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எங்களை
விட்டு போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூ றியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞசலி 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை நடைபெறும் ஆன்மிக நிகழ்வுகளிலும் மதியபோசனத்திலும் உங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.
நடைபெறும் முகவரி:
Gaststätte Garten- und Naturfreunde
Garten
straße 48,
68642 Bürstadt,
Germany.