

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியின் Lampertheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காந்திமதி சோமலிங்கம் அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr.சோமகாந்தன்(Scientist), துஷ்யந்தன்(Engineer), காலஞ்சென்ற குகநேஸ்வரன், நிமலேஸ்வரன்(Engineer), வருணாஜினி(M.A.) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. துசிந்தா, மதிவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷயனா, தஷ்வின், தரிஷ், கிரிஷ், ஜஸ்மின் ஆகியோரின் செல்லப் பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், கதிர்காமநாதன், பத்மநாதன், மற்றும் சறோயாதேவி(USA), கமலாதேவி(India) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபாக்யலட்சுமி, கந்தசாமி, தில்லைநாதன், காலஞ்சென்ற சண்முகலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அம்மா…
உன் முகம் எங்கள் விடியலாய் இருந்தது,
இன்று அந்த விடியல் மறைந்துவிட்டது.
உன் வார்த்தைகள் எங்கள் அடைக்கலமாய் இருந்தது,
இன்று அந்த ஓசை மௌனமாயிற்று.
நாங்கள் அழுதால் தழுவிய கைகள்,
இன்று காலியாகிப் போயின.
ஆனால் –
நாங்கள் மூச்சுவிடும்
ஒவ்வொரு கணத்திலும்
நீ உயிராய் இருக்கிறாய்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4917641494569
- Phone : +4962415007192
- Mobile : +491799025666
- Mobile : +491729938465