Clicky

மண்ணில் 29 AUG 1929
விண்ணில் 03 JAN 2021
அமரர் காந்திமதி சிவசுப்பிரமணியம்
வயது 91
அமரர் காந்திமதி சிவசுப்பிரமணியம் 1929 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

குமுதினி பொன்னுத்துரை 10 JAN 2021 Canada

உங்கள் தாயாரின் பிரிவு என்றும் உங்களிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. உங்கள் அனைவரின் வலியை நாமும் எமது உற்ற உறவுகளை இழக்கும் போது உணர்ந்திருக்கிறோம். எம்மால் எம்மைப் பெற்றவர்களிற்கு செய்யக்கூடியது, எமது கண்ணீரை மறைத்து அவர்களை மனநிறைவோடு அவர்களின் அடுத்த பயணத்திற்கு அனுப்பி வைப்பதுதான். எமக்காகவே வாழ்ந்து, எம்மை நல்வழிப்படுத்தி எம்மால் இனிதே வாழ முடியும் என்ற மனநிறைவோடு இறையடி சேரும் அவர்களின் எண்ணம் போல் வாழ்ந்து அவர்களின் வாழ்வை நாம் அர்த்தப்படுத்துவதே எம்மால் செய்ய முடியும். லோகா, உங்களிற்கும் உங்கள் உடன் பிறந்தவர்களிற்கும் எல்லாம் வல்ல இறைவன் துணை மட்டுமல்ல, உங்கள் தாயும் இறைவடிவில் உங்களோடு துணையிருப்பார். அவர் விட்டுச்செல்லும் இனிமையான நினைவுகளின் துணையோடு இத்துயரைக் கடந்து பயணிக்க எல்லாம் வல்ல இறைவன் துணை.