அன்பின் மாமாவின் மறைவு செய்தி கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.நாங்கள் அவருடன் பழகிய காலங்கள் இப்பொழுதும் பசுமையாக இருக்கிறது.நாங்கள் அவரிலும் பார்க்க வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் எங்களுடன் நண்பர்கள் போல் தான் பழகுவார்.எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார்.பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.எங்கள் நண்பர்கள் கூட்டம் ஒன்று சேரும் இடம் 11,Galpotha street,Kotehena.அங்கு தான் மாமாவும் அவருடைய மருமகனும் எனது பால்ய நண்பனுமாகிய ராசையா சிவகுமார்( retired HNB manager) வசித்து வந்தார் பின்பு அவரின் மகன் காந்தனால் இங்கு கனடாவில் குடியேறி வசித்து வந்தார்.kotehena வில் அவர் இருந்த காலத்தில் எங்கள் நண்பர்களுடன் தானும் ஒரு நண்பராக கரம் cards எல்லாம் விளயாடுவார்.உண்மையிலேயே அவருடைய இழப்பு ஓர் பேரிழப்பு.இனி எப்ப இப்படி ஒரு புன்முறுவல் பூத்த ஒரு முகத்தை காண போகிறோம்.அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன் சுப்பிரமணியம் சிவகுமார் ( பாபு)
We are honored and blessed to have known this beautiful condolences.