
யாழ். அல்வாய் மடத்தடியைப் பிறப்பிடமாகவும், புலோலி குரும்பைகட்டியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சுப்பிரமணியம் அவர்கள் 02-10-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கனகேந்திரன், மகேந்திரன், சுபாஜினி, யோகேந்திரன், சுரேந்திரன், சுகந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பானுமதி, செல்வஜோதி, நாகேந்திரம், சிந்துஜா, நிலாயினி, துஷ்யந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகசபை, சந்திரசேகரம், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி முருகுப்பிள்ளை, பரமேஸ்வரி இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோபிகா, கஜன், மிதுஷா, கிஷோர், லக்ஷா, வேணுஜா, வினேஸ், சரண்யா, ஆரன், ஐஸ்வன், ஆஞ்சன், சுஜய், கிருஷி, பிரதீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.