

யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சம்பந்தமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 20-02-2025
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 20-02-2025 வியாழக்கிழமை அன்று செல்வச்சந்தி தொண்டமானாறு கோவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மதிய போசனம் நிகழ்வும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.