அன்புக்குரிய மோகனச்சந்திரனின் பிரிவு எங்கள் எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.சமூக மேம்பாட்டு சிந்தனையாளர். பல நற்பணிகளுக்காக புலத்திலுள்ளவர்களையும் நிலத்திலுள்ளவர்களையும் இணைத்து பாலமாக செயற்பட்டவர்.அனைவரிடத்திலும் அன்போடும் பண்போடும் பழகக்கூடிய நற்பண்பாளன்.அவரது பிரிவை மனம் ஏற்க மறுக்கிறது.மனைவி பிள்ளைகள் குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. எப்போதும் எம்மனங்களில் நீங்காநினைவாக வலம்வருவார்.
அவரது ஆத்மா அமைதி அடையட்டும்.