Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 NOV 1933
இறப்பு 25 MAY 2020
அமரர் கந்தையா சிவகுரு
வயது 86
அமரர் கந்தையா சிவகுரு 1933 - 2020 பளை, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கிளிநொச்சி பளை பேராலையைப் பிறப்பிடமாகவும், முல்லையடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவகுரு 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 02/06/2022

அன்பை விதைத்த அப்பாவே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
 பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஈராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!

கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
அப்பா இனி காண்பது எப்போது?

ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்றழைக்க
நீங்கள் எனதருகில் இல்லையே!

இன்றும் என்னை நிழல் போலத்
தொடர்ந்து வரும் அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகின்றேன் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 25 May, 2020
நன்றி நவிலல் Wed, 24 Jun, 2020