
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா மாணிக்கலிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை இழந்து ஆண்டு
பதினொன்று ஆனாலும்
உந்தன் ஆசைமுகம்,
நேசப்புன்னகை மறையவில்லை.....!
அப்பா கலகலப்பாக பேசும்
கனிவான புன்னகையும் பாசத்துடன்
உறவாகும் உங்கள் அன்பையும்
பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து கண்ணீர்
சொரிகின்றோம்...
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்களிடம் கல்வி கற்றவர்கள் எல்லாம்
இன்று வானுயற வாழ்கிறார்கள்,
நீங்கள் விட்டு சென்ற இடம்தான்
எங்களுக்குப் பள்ளிக்கூடம் ஆகியிருக்கிறது.
தோன்றாத நிழலாக நம்மைத் தாங்கி வந்தீர்கள்,
தோன்றிய பிறகு, நம்மை வாழவே வழி காட்டினீர்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!