12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா பொன்னுத்துரை
மறைவு
- 20 JUL 2013
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
இயக்கச்சி சங்கத்தார்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பொன்னுத்துரை அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!
ஆண்டுகள் கடந்தாலும்
உங்கள் நினைவுகளை
நிதம் நிதம் நெஞ்சில்
நினைத்து கண்ணீர்
சொரிவதைத் தவிர
எம்மால் ஏதும் செய்ய
முடியவில்லையே ஐயா!
எங்களின் நிறைவே உங்களின்
வாழ்வு என்றபடி ஆனந்தமாய்
அன்பு நிறைவுடன் வாழ வைத்த
உங்களை காலன் அவன் கவர்ந்து
சென்று எம்மை கண்ணீர்
சொரிய வைத்து விட்டான்...
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்