யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கண்ணம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாட்கள் கடந்ததம்மா
மாண்டுபோன உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கிறோம்...
காலம் கடந்து காலனவன் எமை
அழைக்கும்வரை கண்ணீரோடு
காத்திருப்போம் உனைக் காணும்
வரை உன் நினைவு சுமந்த
வலிகளைத் தாங்கி வழிகளைத்
தேடித் தொடரும்
இந்த சுகமான வாழ்க்கைப்
பயணத்தில் எமக்கு வழிகாட்டி
வல்லமை தாரும் எம் தாயே!
எம் உள்ளத்தில் கருணையுள்ள
கடவுளாய் வாழ்வீர்கள்...
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 05-07-2025 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Gilberte de courgenay 10, 3027 Bern எனும் முகவரியில் நடைபெறவுள்ள எமது தாயாரின் அஞ்சலி நிகழ்விலும் மதிய போசனத்திலும் குடும்ப சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 05-07-2025 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் 3300 McNicoll Avenue B1/B2, Toronto , ON M1 V 5J6 எனும் முகவரியில் நடைபெறவுள்ள எமது தாயாரின் அஞ்சலி நிகழ்விலும் மதிய போசனத்திலும் குடும்ப சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
Dear Divine Brother Kugan and Family members My deepest condolences on the loss of your mother -Bro.Thanga 🇨🇦