1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கண்மணி இராசையா
வயது 82
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கண்மணி இராசையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
தொலைத்துவிட்ட ஒரு வருடத்தில்
உங்கள் முகத்தை தேடாத நாட்களில்லை!
உங்களைக் காணாத என் கண்கள்
நித்திரையை தொலைத்துவிட்டு நீரை வடிக்குதம்மா!
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழி நடத்திய எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் இல்லா இவ்வுலகம் என்றும் இருள் மயமானது!
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
அமரத்துவம் அடைந்துவிட்ட திருமதி கண்மணி இராசையா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவுகள் நண்பர்களனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு அன்னாரின் ஆத்மா இறையடியில்...