Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 AUG 1944
இறப்பு 15 JUL 2021
அமரர் கண்மணி நடராசா
வயது 76
அமரர் கண்மணி நடராசா 1944 - 2021 அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கண்மணி நடராசா அவர்கள் 15-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(விடிவெள்ளியர்), விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும், 

இந்திராணி(பெறாமகள்- பிரான்ஸ்) மற்றும் ஜெயந்தினி(உப அதிபர்- யாழ் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயம்), ஜெயகுமார்(அனலைதீவு), ஜெயரஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாக்கியநாதன்(பிரான்ஸ்), சிவபாலன்(அனலைதீவு), சசிகலா(அனலைதீவு) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

லோகநாயகி(பாக்கியம்- கனடா), பசுபதிப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கதிரவேலு, யோகம்மா(கனடா), மனோன்மணி(அனலைதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியதர்சினி(கொழும்பு), அருமைரெத்தினம்(கனடா), நிமல்ராஜ், சுபாசினி(பிரான்ஸ்), துஸ்யந்தன், கீர்த்தனா(பிரான்ஸ்), சுசீதரன், அஸ்விகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வரோதயன், கஜானன், லக்ஸ்மிதா(கொழும்பு), கவிசன், யஸ்வந், சனந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனலைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்திராணி - பெறாமகள்
ஜெயந்தினி - மகள்
ஜெயகுமார் - மகன்
ஜெயரஞ்சன் - மகன்
பசுபதிபிள்ளை - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices