யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வீரமனை குப்பிளான், சுவிஸ் Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணேசலிங்கம் அருளம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
என்னை ஆண்டு கொண்டு
எனக்காகவே வாழ்ந்தாய்
எல்லாவற்றிலும் முன்னோடி நீ
பிரிவிலும் முந்திக் கொண்டாய்
நீயில்லா உலகம் இருளாய்
மறக்காத உன் நினைவுகளுடன்
துணையின்றித் தவிக்கும்
துணைவனாக நான் இங்கே
இறுதிவரை ஓய்வில்லா
சுறுசுறுப்போடு எம்மை
அரவணைத்து மகிழ்ந்த அம்மாவே
நீ இல்லாது எல்லாமே வெறுமையாக
வாசலில் கண்டவுடன்
வாய் நிறைந்த புன்னகையோடு
சமையலறை ஓடிச் சென்று
பிள்ளைகள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் என்றே
இன்பம் பொங்கி வர
விருந்து வைக்கும் உன்னை
இனி நாம் எங்கு தேட
நீ இல்லாத தனிமையும்
வெறுமையும் நீங்கப்பெற
வானுயர நீ தந்த அன்பை
யார் தருவார் எமக்கு
நீ எம்மைப் பிரிந்த நினைவுகளில்
வருடம் ஒன்றானது
வானம் இடிந்து வீழ்ந்தாலும்
எங்கள் வாழ்வுவரை
உன் நினைவுகள் எம்மோடு
என்பதைக் காலங்கள்
சொல்லி நிற்க
மலர்கள் தூவி உன்னை
வணங்கி நிற்கும்
குடும்பத்தினர்
Rest in peace, you were such a good soul. We will all miss you deeply- Rasiah, Ranjini, Thilakshi, Thilaxshan (Canada)