யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை புரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Yverdon-les-Bains ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சதானந்தலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:17/04/2023
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
தாங்கள் எம்முடன் இருந்த நாட்கள்
தினந்தோறும் வசந்தகாலம் தான்
ஆனால் உங்களை இழந்து தவித்தாலும்
உங்கள் நினைவில் வாழ்கின்றோம்
இன்று நம் கண்ணீர்
நிறைந்த கண்கள்
உமைத்தேட எம்மனமோ உங்கள்
அன்புக்கும் நிழலுக்கும்
ஏங்கித் தவிக்கிறதே !
கண்கள் நிறைந்த நீரோடு
கனவு சுமந்த நெஞ்சோடு
நின் வரவை எண்ணி
விழி வாசலை தேடுதே!
ஆண்டு ஒன்று
ஆனாலும் உங்கள் அன்பு
முகமும் அரவணைப்பும்
உங்கள் நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை விட்டு
அகலவில்லை அப்பா!
தூணாக காலமெல்லாம்
காத்திடுவாய் என இருந்தோம்
காலன் அழைத்தவுடன்
கறைந்ததேனோ காற்றோடு?
வானம் விரிந்திங்கு
வண்ண மழை தூவினாலும்
காணும் உறவெல்லாம்
கைகொடுத்து உதவினாலும்
அப்பா உங்கள் உறவு
இப்போதில்லை என்ற உணர்வு
அனலாய் எறிக்குதப்பா
அகிலமே வெறுக்குதப்பா!
நீங்கள் பூவுலகை
விட்டு மறைந்த போதும்
உங்களது ஆத்ம வழிகாட்டலிலும்
உங்களது நினைவுகளுடனும்
எமது வாழ்க்கை பயணம் தொடரும் அப்பா...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!