
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா யோகம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-04-2023
உயிர் தந்து எம்மில் உறவாடி மகிழ்ந்த
திருமுகம் மறைந்து இன்று
ஆண்டொன்று ஆகியதே...
எம் உயிர் உள்ளவரை என்றும்
எம் மனதை விட்டு அகலாது
அம்மா உன் திருவுருவம்!
நிலா மகளாம் உம்மை
நெடுந்தூரம் அனுப்பிவிட்டு
நித்தமும்
நாம் கலங்குகின்றோம்
நின் நினைவில் என்நாளும்.
வான்போல் பரந்த உள்ளம்
முழுமதிபோல் மலர்ந்த திருவதனம்
வாசல் திறந்தவுடன் வா!
என்றழைத்து
நிற்கும் உன் வசந்த அழைப்பு
எம்மில் ஊசலாடி நிற்கையில்
என்னவென்று மீண்டெழுவோம் எம்தாயே!
அம்மா! உன் புன்நகைப்பு என்றென்றும்
எம்மனதில் மின்னலாய் வந்து மிளிர்கிறது
என்நாளும் ஏழேழ் பிறப்பிலும்
உன்நினைவில்
வாழ்ந்திட
எமை வாழ்த்தி நிற்பீர்
Miss you Ammama