யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா விக்கினேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமைதியான புன்முறுவல்
பூக்கும் முகம்!
இரக்கமுள்ள மனம்!
பாசத்தால் அரவணைத்து
செல்லும் கைகள்!
நீ என்னிடம் பேசிய அந்த கடைசி
வார்த்தை....
உன் அமைதியான குரல்......
என்னால் இன்றும் மறக்க முடியாத
நிஜமாக என் காதில் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது.....
ஆசையாக வளர்த்த உன்
உடன்பிறப்புகளிடம் கூட
சொல்லாமல் போனதெங்கே அண்ணா!
நீ வருவாய் என்று தினமும்
வாசலில் தவம் கிடக்கிறோமே
அதை நீ அறியவில்லையா????
உயிர் உன் உடலை விட்டு
பிரிந்தபோதும் கூட
புன்னகை மாறாமல் வாடாத
மலராக இறைவனிடம் சென்றாயோ?
நீ விதையிட்டு சென்ற
கனகாம்பரமும் உன் புன்னகை போல்
வாடாத மலராக புன்னகை வீசுகிறது!
அண்ணா மீண்டும் ஒருமுறை
உன் தங்கையாக பிறக்க வரம் தருவாயா????
ஏக்கத்துடன் உன் அன்பு தங்கை! ரூபிகா
"மறுக்க முடியாத உண்மை மரணம் என்றாலும் !
உங்கள் ஞாபகம் நெஞ்சை நனைக்கிறது அப்பா!!
உணவுண்டு உறங்கச் செல்லும் வரை,
உணர்விலும் உணரவில்லை அப்பா!
உங்கள் உயிர் பிரியும் என்று!
பாய்ந்து வந்த அலைகள் கரை தொடும் முன்பே
கடல் வற்றிப் போனால் போல் " உங்கள் மரணம்!
கண்மூடி பார்க்கின்றோம் இத்தனையும் கணவாகி
போகாதோ என்று.
ஓராண்டும் கழிந்ததெ நீங்கள் சென்று
உங்கள் ஞாபகம் நெஞ்சை நனைக்கிறது அப்பா!
அன்னாரின் நினைவஞ்சலி 12-09-2020 சனிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மதியபோசம் இடம் பெறும்.