
முல்லைத்தீவு புதுமாத்தளனைப் பிறப்பிடமாகவும், அம்பலவன் பொக்கணையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வேதாரணியம் அவர்கள் 17-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தகுமாரி(பிரித்தானியா), சிவகுமார்(பிரித்தானியா), ஜெயகுமார்(பிரித்தானியா), விஜயகுமார்(பிரித்தானியா), ஜெசிந்தகுமாரி(சுவிஸ்), அகிலகுமார்(பிரித்தானியா), விஜயகுமாரி(பிரித்தானியா), றெஜிதகுமாரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லமுத்து, சிவசோதி, கனகரத்தினம், வியாழம்மா, காலஞ்சென்ற குமாரசுவாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன்(பிரித்தானியா), உஷா, கிருஷ்ணவேணி(பிரித்தானியா), தனேஸ்வரி(பிரித்தானியா), யோகேஸ்வரன்(சுவிஸ்), சிந்துஜா(பிரித்தானியா), சண்முகலிங்கம்(பிரித்தானியா), சதீஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை, சிவகொழுந்து, இரத்தினம், ராசமணி, நாச்சிபுள்ளை, காலஞ்சென்ற பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனோஜன், லேகா, ஆந்திரேயா, கம்சிகா, ஷர்மிகா, தருண், ஜனுசன், பிரமினா, ஐஸ்விதன், ஸ்ரீநிதா, டனூஷன், யதுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அம்பலவன்பொக்கணை இந்து மயானத்தில தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்போடும் பாசமுடனும் பேசிடும் எமது அன்புக்குரிய மாமா அவர்கள் எமை விட்டுப்பிரிந்தார் என்ற செய்தி எமது குடும்பத்தினர்க்கு பேரும் துயரை தருகிறது. இத்துயரால் கலங்கும் எமது அன்பான மாமி புனிதம்மா மற்றும்...