யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரம், பிரான்ஸ் Rosny-sous-Bois ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தியாகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அகரம் தந்து சிகரம்வரை
ஊரோச்சும் வகை ஐவரையும்
உயர்த்தி விட்டு
பணி முடிந்ததென
விண்ணகம் போனீரோ
வம்சமது விழுதுவிட்டு கிளை
பரப்ப ஆணி
மூலவேராக நீர் இருந்தீர் இன்று
தனி மரமானோம்
உறவென ஆயிரமிருந்தும்
உன் தோளுக்கு
எங்கே செல்வோம்...?
துடுப்பிழந்த படகானோம்
உடல் வருந்தி உழைத்து
எமை உயர்த்தி வைத்து பணி
முடித்து வெறுங்கையுடனே திருப்பி
விட்டீர்கள் தல்லையப்பற்று முருகன் தாழ்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதய துடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியை முன்னிட்டு வீட்டுக்கிரியை நடைபெற்று பின்னர் 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைதொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் தாங்கள் தங்கள் குடும்பம் சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:-
Eglise saint Louis,
13 Rue Etienne Dolet,
93140 Bondy, France