2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா தியாகராஜா
முன்னாள் ஓய்வுபெற்ற அரச தபால் உத்தியோகத்தர்- புங்குடுதீவு
வயது 91

அமரர் கந்தையா தியாகராஜா
1931 -
2023
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரம், பிரான்ஸ் Rosny-sous-Bois ஆகிய இடங்களை வதிவிடமாகவும்கொண்டிருந்த கந்தையா தியாகராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-03-2025
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே
நீங்கள் பிரிந்து இரண்டு வருடம்
ஓடிப்போனது இன்னமும் நம்பவே
முடியாமல் நாங்கள் இங்கே தவிக்கின்றோம்
ஈராண்டு கடந்தும் உங்கள் நினைவுகள்
எமை தினமும் வாட்டி வதைக்கின்றது.
எத்தனையாண்டுகளானாலும் உங்கள்
அத்தனை நினைவுகளும் எமைவிட்டு
என்றுமே பிரியாது அப்பா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்