யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத்தலைவனாகவும், அன்பின் உறைவிடமாகவும்,
பாசத்தின் பிறப்பிடமாகவும், கல்வி ஒளி ஆசிரியராகவும்,
அதிபராகவும் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து அமரதீபமாகிவிட்ட
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கு.
அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்து எமது இல்லத்திற்கு நேரில் வந்தும் உலகின் பல பாகங்களில் இருந்தும் தொலைபேசி வழியாகவும், மின்னஞ்சல், முகநூல் வழியாகவும் அழைத்து அனுதாபங்களை தெரிவித்தோருக்கும், பார்வைக்கு வைக்கப்பட்ட போது மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாது மண்டபத்திற்கு வந்து பார்வையிட்டோருக்கும், மலர் வளையங்கள் சமர்ப்பித்தோருக்கும், அஞ்சலிப்பிரசுரங்கள் வழங்கிய சுன்னாகம் மக்கள் ஒன்றியத்திற்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டோருக்கும், இம்மலருக்கு தமது பங்களிப்பைச் செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும், நினைவுமலரை அழகுறத் தொகுத்து அச்சிட உதவிய முகூர்த்தம் அச்சகத்தாருக்கும், மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் கலந்துகொண்டு சிறப்பித்தோருக்கும், மற்றும் பல வழிகளில் உதவியோருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
condolence RIP.