

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தில்லையம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:21/10/2022.
தெய்வமே!!! நாட்கள் நகர்ந்து
வருடமும் வந்துவிட்டது
கண்களில் நீர்வற்றிப் போகுகிறது
நடந்தது கனவாகாதோ என்று......
எம்மை ஆறாத்துயரில்
ஆழ்த்திவிட்டு மீளாத்துயில்
கொண்டதை எண்ணித்துடிக்கின்றோம்
விடாமுயற்சியும், மனத்திடமும்,
அயராத
உழைப்பும் வெளிப்படையான
பேச்சும்,
எளியோரை மதிக்கும்
பண்பையும்
எண்ணி வியக்கின்றோம்........
காலனவன் கவர்ந்த
கணப்பொழுதில்
தாயின்
அரவணைப்பில்
சேயின்
முகமலர்ற்சியை உங்களில்
கண்டு நாம் வியந்தோம்......
அப்பா !!! பிரிக்க முடியாத
சொந்தமும் மறக்க முடியாத
பந்தமும் தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாம் உங்கள் அன்பு மட்டுமே
கல்வி
வளம் பெருக வைத்து
வாழ்க்கை
தனைத்தேடித்தந்து
வாழ வைத்த
தெய்வம் நீங்கள்.......
ஈரவிழிகளோடும், கலையாத
நினைவுகளோடும் உங்கள்
ஆன்மா சாந்தியடைய கண்ணீர்
துளிகளைக் காணிக்கை
ஆக்குகின்றோம்
Please accept our condolences. May his soul rest in peace.