1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தர்மராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!
அன்பு நிறைந்த எங்கள் ஐயாவே
ஆருயிர்த் தந்தையே
கண்ணை இமைகாப்பதுபோல்
எங்கள் அறுவரையும் காத்திரே
எல்லோரையும் அன்புடன் அரவணைக்கும்
நல்ல பண்பாளரே!
எங்களுடன் உங்கள் மருமக்களையும்
பெற்ற பிள்ளைகள் போல் காத்தீரே
ஐயா என்று எல்லோரும் சொல்லும்
சொல்லுக்கு இலக்கணமானீரே
உங்கள் பேரப்பிள்ளைகளையும்
பாசமுடன் பேணிக்காத்து வந்தீரே
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ?
ஆண்டொன்று கடந்தாலும்
ஆறவில்லை ஐயா நம் துயரம்...
உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்