1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா சுந்தரலிங்கம்
Retired Sri Lanka Railway - Foreman
வயது 88
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
மலேசியா Penang ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை மல்லிகா ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சுந்தரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும் துடிக்கின்றோம்
ஆண்டொன்று ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள் முகம்
தெரிகிறது தினம் தினம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு மதிப்புகள் யாவும்
எங்கள் வாழ்வில் என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம் மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளையாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கின்றோம்....
தகவல்:
குடும்பத்தினர்
Our heart felt condolences to Achi and family. may his soul rest in peace.