5ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/204144/4680055c-703b-4871-8359-9cc882e93b78/24-664e3ddede464.webp)
அமரர் கந்தையா சோமசுந்தரம்
வயது 71
![](https://cdn.lankasririp.com/memorial/profile/204144/6f42a175-908c-4405-ba4a-1858abda10f8/24-664e3dde7e81d-md.webp)
அமரர் கந்தையா சோமசுந்தரம்
1947 -
2019
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வதிவிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சோமசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீயினில் அலையான சுவாலையாய்
ஐந்து வருடங்களாகியும் அனல் கக்கி எரியுது- அப்பா
எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே
நீங்கள் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம் இன்னும்
உடைந்துதான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறது- அப்பா எங்கள் மனங்கள்
உங்கள் நல்ல முகம் மறைந்ததென்று
சொல்ல முடியவில்லை எங்கள் சோகத்தை
மெல்ல முடியவில்லை உங்கள் நினைவுகளை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்