Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 JUN 1947
இறப்பு 23 MAY 2019
அமரர் கந்தையா சோமசுந்தரம் 1947 - 2019 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வதிவிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  கந்தையா சோமசுந்தரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த
ஏன்? எங்கே? பிரிந்து போனீர்கள்!

உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,
மதிப்புக்கள் எல்லாம்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா

நாம் இந்த மண்ணில் வாழும் வரை
நம் இதயத் தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும்
உங்கள் நினைவுகள்!

ஜென்மங்கள் எத்தனை ஆனாலும்
வருகின்ற ஜென்மம் எல்லாம்
இந்த ஜென்ம உறவாயே வர வேண்டும் நீங்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!  

தகவல்: குடும்பத்தினர்