யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவசம்பு அவர்களின் நன்றி நவிலல்.
எங்களை ஈன்றெடுத்த
இன்பச் சுரங்கமே…
நெஞ்சில் இடியைத் தந்து
போனது ஏனோ?
உங்கள் பாசம் கலந்து ஓடுகின்ற
எங்கள் உடலின் இரத்தம்
ஓடாமல் உறைந்து நிற்கிறதே !
உங்கள் சுண்டுவிரல் பிடித்து
நடந்த பாதைகளில்
கற்களும் முற்களும் கிடக்கிறதே !
நிலவின் ஒளியில் கலந்தீர்களா?
நிறைந்த வானில் மறைந்தீர்களா?
எங்கே சென்று இருந்தாலும்
எங்கள் விடியல் கதிராய் வாருங்கள் !
கண்ணீர் சிந்தும் விழிகளுக்கு
ஆறுதல் சொல்ல வருவீர்களா ?
புலம்பித் தரியும் நெஞ்சிற்கு
புத்துணர்வைத் தருவீர்களா…?
இல்லத் தலைவன் நீங்கள்
இல்லாமல்தான் போனதனால்
முல்லைகள் பூத்த கொடிகளிலே
மொட்டுக்கள்கூட மலரவில்லை !
கனிகள் நிறைந்த மரங்களுமே
கலையை இழந்து
நிற்கின்றன
குருவிகள்கூட மரக்கிளையில்
குமுறிக் குமுறி அழுகின்றன !
அன்பின் வடிவாய் ஆனவரே
அவனியில் வாழந்த ஒளிச்சுடரே
திசைகள் எங்கும் நிறைந்தவரே
ஆறுதல் மொழியைக் கூறுங்கள் !
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
உத்தம மனிதர் சிவசம்பு ஐயா அவர்கள் இறைவனின் திருப்பாதம் அடைந்ததை அறிந்தவுடன் உள்ளம் கலக்கமுற்று, நேரில் வந்தும், தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும் தங்களின் இரங்கலைத் தெரிவித்தவர்களுக்கும், ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர்மாலைகள் மற்றும் மலர்வளையங்கள் சாத்தியவர்களுக்கும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!
ஐயா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் ஓம் சாந்தி ஓம் சாந்தி