

யாழ். கோண்டாவில் கிழக்கு செருக்கப்புலம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவலிங்கம் அவர்கள் 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கமலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயகுமாரி(ஜெயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாஜினி(பிரித்தானியா), சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யாதவன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
கீர்த்தனா(கியா- பிரித்தானியா) அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சதாசிவம்(வெள்ளைத்தம்பி) மற்றும் விமலாதேவி(விமலா- கனடா), காலஞ்சென்ற விக்னேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகசபாபதி மற்றும் சாந்தவதனா(வதனா- கனடா), காலஞ்சென்றவர்களான நடராசா(ராசா), தேவராசன் மற்றும் செல்வகுமாரி(பிரித்தானியா), விஜயகுமாரி(பிரித்தானியா), உதயகுமாரி, இரத்னகுமார்(பிரித்தானியா), லவகுமாரி(இந்தியா), காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு மனோன்மணி(மனோ) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details