யாழ். மட்டுவில் தெற்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி D10 உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், திருநெல்வேலி தெற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவஞானம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி, நன்றி நவிலலும்.
எங்கள் குடும்ப தலைவனாகவும்
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் பிறப்பிடமாகவும்
கல்வி ஒளி ஆசிரியராகவும், அதிபராகவும்
வையகத்தில் வாழ்ந்து அமரதீபமாகிவிட்ட
எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்கு
அன்பிற்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய் தரணியிலே
எம் அருகில் வாழ்ந்தவரே
இவ்வுலகை விட்டு பிரிந்தது தான் ஏனோ?
உங்கள் பிரிவு எம் வாழ்வில்
அழியாத நினைவலைகள்
அன்பையும் அறிவையும் அதிகமாய் தந்து
எங்களை வளர்த்த அப்பாவே
இந்த அவனியிலே எமை
தவிக்க விட்டு அமைதியாய் சென்றீர்களோ
நான் கண்ணயரும் நேரமெல்லாம்
கனவினிலே நீர் வந்து எனை அழைக்கும்
உம் குரலே என் செவிகளிலே ஒலிக்கின்றது
உங்கள் நிஜமான வாழ்வுதான் நிழலாகி போனதுவோ
கண்ணீர் நிறைந்த வலியோடும்
கனத்த மனதோடும் உங்களுக்கு
நாம் அஞ்சலி செலுத்துகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் பிரிவுத்துயர் செய்திக்கேட்டு ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், நேரிலும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் அவரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Happened to see the obituary notice of Uncle Suvagnam -Who was our neighbour. Our Heartfelt condolences to Aunty Suba acca Bama acca Suhanthi Tharshi Pratheepan and the rest of the family . Please...