யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், குளியாப்பிட்டி, ஜேர்மனி Heilbronn ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கடலைகள் கவி பாடும் கரம்பொன்னில் பிறந்து
காவியமாய் யேர்மனியில் வாழ்ந்த குலவிளக்கே!
கதை பேசும் நின்வதனத்தை காலன் ஏன் பறித்தானோ
காலங்கள் உருண்டு ஓடியதே! கண்மணியே நீ எங்கே!
ஓராண்டு ஓடியதே உன்நினைவு உறைகிறதே
ஒருமுறை நீ வாராயோ! உள்ளமது பேசாதோ!
ஒவ்வொரு நாளும் உன் நினைவால் வாடும் வதனங்கள்
ஒளி பெற்று வளம்வாழ ஓடி நீ வாராயோ!
அப்பா என்ற அழகான பதம் சொல்லி
அன்பால் அழைத்தோமே அரவணைத்து மகிழ்ந்தாயே!
அலைமோதும் நினைவுகளை அசைபோட்டு பார்க்கையிலே
அழுகின்றோம் அவனியிலே உங்களை நாம் தேடுகின்றோம்
கண்ணின் மணியாக கருத்துடனே எமை வளர்த்து
எண்ணம் சிறந்திடவே ஏற்றம் மிகு கல்வி தந்து
வண்ண மலர்களாய் வையகத்தில் வாழவைத்து
மண்ணுலகம் விட்டு இறைவனிடம் சென்றாயோ அப்பா!
பேரப்பிள்ளைகள் பேரனை நினைத்து கதை பேச
பேசாத படம் பார்த்து தேம்பி அழுவது கேட்கிறதா தாத்தா!
பேசும் பூட்டனின் மழலை இனித்திருக்க
பேசாமல் சென்றாயோ கொள்ளுத்தாத்தாவே!
சிரித்த முகத்தோடு சிங்கார எழில் வேந்தன்
சிறந்த நண்பன் என்ற பட்டம் பெற்றாயோ பாரினிலே
சிம்மாசனத்தில் இருந்த செல்லமணியே!
நீ எங்கே! சீர்பெற்ற சிற்பமாய் சிவனாகி விட்டாயா!
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் குமாரசாமி அருளமணி குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத்...