திதி:16/08/2026
யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சிவன்கோவிலடி புத்தூர் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா செல்வராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாசமிகு தந்தையே
எங்களை விட்டுப் பிரிந்து
ஆண்டு இரண்டு கடக்கின்றன
உங்கள் நினைவுகள்
நெருக்கியே வருகின்றன.
அன்பின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
கடமைமிகுத் தலைவனாய் இருந்து
நேர்மையாக வாழ்ந்து
வெற்றிகள் பல பெற வித்திட்ட
தன்னிகரில்லா தந்தையே!!
இதை எப்படி தாங்குவோம் அப்பா..!
உங்களின் இழப்பைத் தாங்க முடியாமல்
தவிக்கும் நாங்கள் உங்கள்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!
மண்ணைவிட்டு மறைந்தாலும்
எங்கள் மனங்களைவிட்டு
என்றென்றும் நீங்கள்
மறையமாட்டீர்கள் அப்பா..!
அன்னாரின் 2ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள்
எதிர்வரும் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.