Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 15 FEB 1942
உதிர்வு 08 AUG 2024
அமரர் கந்தையா செல்வராசா 1942 - 2024 சிறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சிவன்கோவிலடி புத்தூர் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா செல்வராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் இருந்து
வழிகாட்டும் துணை நீதான் ஐயா!
ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பிரிந்து
இனி எமக்கு ஆறுதல் யார்தான் ஐயா?

நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதமாகி
மாதங்கள் ஆண்டாகி போனாலும்
ஆறவில்லை எங்கள் துயர்

உறுதியின் உறைவிடமாய் - எங்கள்
உள்ளத்தில் வீற்றிருக்கும்
எந்தையே, அன்புத் தந்தையே!

சத்தம் எதுவுமே இல்லாது
மீளாத்துயில் கொண்டது ஏனோ!

எமக்கு அக்கணமே சோகமும், துயரும்
வந்து சேர்ந்தது! செய்வது அறியாது
கலங்கிய விழிகளுடன் கனத்த மனதுடன்
உங்களின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos