2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா சதாசிவம்
வயது 73
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை வடக்கு சங்குதறையைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சதாசிவம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்பு உறவே அப்பா
எம் உலகமே நீங்கள் தானே அப்பா
எமக்கு எல்லாமே நீங்கள் தானே அப்பா
அன்பையும் பண்பையும் பொழிந்த நீங்கள்
எம்மை விட்டு ஒரு நொடியில் மறைந்ததேன் அப்பா
கண்ணை காக்கும் இமைபோல
எம்மை எப்போதும் காத்து வழி நடத்தினீர்கள் அப்பா
இன்று நீங்கள் இல்லை இவ்வுலகில்
செய்வதறியாது தவிக்கின்றோம் அப்பா
இரண்டாண்டுகள் கடந்துவிட்டோம்
உங்களை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீங்கள் நீங்கினாலும்
நீங்காது உங்கள் நினைவு
எங்கள் மனதை விட்டு அப்பா
எங்கள் அன்புத் தந்தையின் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்