
யாழ். வேலணை வடக்கு சங்குதறையைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சதாசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பின் உறைவிடமே
எங்கள் வீட்டின் குலதெய்வமே
பன்னிரெண்டு மாதங்கள் ஓடிவிட்டதையா
பன்னிரெண்டு ஆண்டுகள் போனாலும்
ஆறாதையா உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு
நீங்கள் எம்மை அன்பாய் வழிநடத்த
பல கனவுகளுடன் நாமெல்லாம் ஒன்றாய் வாழ்ந்திருக்க
எம்மை விட்டுச் சென்றதேனோ!
குறைவில்லாமல் நீங்கள் பொழிந்த அன்பினை
இனி இவ்வுலகில் பெற்றிட முடியுமோ
உங்களை தினமும் நாம் கனவில் காண்கின்றோம்
ஏங்கி எழுந்து ஏமாந்து போகின்றோம்
பேரர்கள் எல்லோரும் அனுதினமும் அப்பப்பா
எங்கே என தேடுகின்றனர்
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது
எங்கள் குல தெய்வத்திற்கு பக்தியுடன் எம் இதய அஞ்சலிகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....