யாழ். மாவிட்டபுரம் வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 210, ஸ்ரீரங்கநாதர் வீதி, மாயவன் ஊரை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Carshalton ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசதுரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திகை நிகழ்வு 14-08-2025 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர், 16-08-205 சனிக்கிழமை அன்று மதியபோசன நிகழ்வு நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No.27
Tewkesbury Rd
arshalton SM5 1QD
UK