Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 NOV 1941
இறப்பு 03 OCT 2016
அமரர் கந்தையா இராஜசிங்கம்
ஓய்வுபெற்ற மது வரித்திணைக்கள உதவி ஆணையாளர்- வவுனியா
வயது 74
அமரர் கந்தையா இராஜசிங்கம் 1941 - 2016 Seremban, Malaysia Malaysia
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 08-10-2021

மலேசியா Seremban னைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பளை கட்டுவன் வறுத்தலைவிளானை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இராஜசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஐந்து பேராண்டாய் ஓடியும்
ஓடாத துயரோடு ஒடுங்கிக் கிடக்கின்றோம்
வேராக இருந்த நினைவில்
வேறாக போய்விட்ட நினைவில்

ஆலமரமாய் இருந்தீர்கள் ஆனந்தமாய் நாம் இருந்தோம்
ஆலமரம் சரிந்ததனால் ஆனந்தமும் குறைந்தது அப்பா
உருவம்தான் இல்லையப்பா உணர்வாய் உடன் உறைகின்றீர்கள்
உயிருடன் எம்மோடு உடனிருந்து வழி நடத்துகிறீர்கள்

எதிர்பார்க்கவில்லை உங்கள் பிரிவை
வாழ்கின்றோம் உங்கள் அரவணைப்பில்
தவிக்கின்
றோம் உங்கள் பிரிவால்
வாழ்கின்
றோம் உங்கள் நிழலாய்

ஆண்டுகள் ஐந்தென்ன ஐந்து யுகம் கடந்தாலும்
அழியாத உங்கள் நினைவுகள் எம்மிலே வாழும்
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் கடந்தாலும்
உங்கள் காலடித்தடங்களில் நாம் தொடருவோம்…..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமகள், பேரப்பிள்ளை