மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பளை கட்டுவன் வறுத்தலைவிளானை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இராஜசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாட்கள் நகர்ந்தன
நான்கு ஆண்டுகள் கடந்தன
ஆனால் - நாவில் உம் பேச்சு
நினைவு மாறவில்லை அப்பா...!
அன்பின் பெருமையை உணர்த்திய தெய்வமே சற்று
ஆற்றல் இழந்து ஆறிய காலம் தானோ
இருக்கும் வரை இன்பம் எனும்
இனிய வாழ்வை அளித்தீரே...
எங்களை பாதுகாப்பாக பார்த்து
நல்லவற்றைக் கற்றுத்தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே அப்பா!
எங்கள் மீது நீங்கள் காட்டும்
பாசத்தை, பரிவை,
கரிசனையுடனான கண்டிப்பையும்,
எம்மால் என்றென்றும் மறக்க முடியாது.
உங்கள் இனிய செயல்கள் மூலம்
எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.
நான்காண்டுகள் என்ன
எத்தனை ஆண்டு சென்றாலும்
உங்கள் நினைவுகள் எங்களுடன் வாழும்!
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமகள் மற்றும்
பேரப்பிள்ளை...