கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நவரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.
ஓர் திங்கள் ஆனதுவோ... கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
பாசத்தின் பிறப்பிடமாய்
நேசத்துடன் வாழ்ந்த
எங்கள் மகன் அன்புக்கு
இலக்கணமாய் வாழ்ந்த
இன்னும் பலகாலம் வாழவேண்டிய
எங்களின் உடன்பிறப்பு
எங்களை விட்டுப் பிரிந்து
மாதம் ஒன்றல்ல ஒருயுகமாணாலும்
நாதமாய் அவன் நினைவு
எந்நாளும் எங்களது நெஞ்சங்களில்
நிலைத்து மங்காமல் வாழ்வு கொள்ளும்
என்றும் அவரின் ஆத்மசாந்தி பெற
நன்றே பிரார்த்திப்போம்
என்றும் நினைவில்
ஐயா அம்மா உடன்பிறப்புக்கள்
மனைவி பிள்ளைகள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.