1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நவரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-01-2023
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
நீண்டு நிலையாய் உங்கள் திருமுகம்
காண்கிறோம் கனவில் நிசம்போல் நித்தமும்
மாண்டு விடவில்லை மனங்களில் வாழ்கிறீர்
சிரித்த முகமும் சினக்காத பேச்சும்
புரிந்து பழகும் அற்புதப் பண்பும்
வரித்துக் கொண்டு வாழ்ந்த உறவு
சரிந்து போனதால் தவிக்கிறோம் நாங்கள்
ஒட்டி உறவாடி ஒற்றைக் குடும்பமாய்
கட்டி அணைத்த அன்புத் தெய்வமே
உம் பாசப் பிணைப்பினால் நாம் பலரும் தவிக்கிறோம்
இல்லதின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த உங்கள் அன்புள்ள
ஆத்மாவின் சாந்திக்காய் வேண்டுகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்