யாழ். கொக்குவில் மேற்கு மணியர்பதியைப் பிறப்பிடமாகவும், சொர்ணவடலி கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகாதேவா பத்தர் அவர்கள் 18-12-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கமலம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற துரைச்சாமி, மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, மங்கையற்கரசி, மனோன்மணி, மாசிலாமணி, மாணிக்கவாசகர், மகிழரத்தினம், மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமுதினி(கனடா), புலேந்திரன்(நெதர்லாந்து), ரவீந்திரன்(கனடா), செல்வேந்திரன், சாந்தினி, ஞானேந்திரன்(கிராம அலுவலர் கோப்பாய் பி. செ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனபாலன், ஜெயராணி, கல்ப்பனா, தர்மபாலா(சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர் யாழ் மாவட்டம்), துஸாந்தி(ஆசிரியை யாழ்/ இணுவில் மத்திய கல்லூரி) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2023 வியாழக்கிழமை அன்று காலை பூநாறி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
பூநாறி வீதி,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details