
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரசாமி அவர்கள் 25-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
உஷா, உதயகுமாரி, தயாபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலச்சந்திரன், வாசுதேவன், பாலசுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நடராஜலிங்கம், நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுசியா, நிரோஜி, நிவேதா, நிதுலா, வைஷ்ணவி, சங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஜன்னம் என்பது எவ்வழி வருமோ , மரணம் என்பதும் அவ்வழியே நிகழும் ! ஆனாலும், பெருமகனாய் வாழ்வதென்பது விதிவரைந்த கொடையாம்! மரபுவழி வந்த பெருமையோடு இல்லறத்தின் தலைவனாய் பெருமைகள் பெற்று. நிறைகுடமாய்ப்...