

யாழ். கரவெட்டி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குலசேகரியம்மா அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார்(லண்டன்), கிரிதரன்(கொழும்பு), கிரிஜா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிமலதேவா, காஞ்சனா, காவிந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மராஜா, குலக்கொழுந்து மற்றும் கோபாலகிருஷ்ணன், காலஞ்சென்ற இராசபூபதி, சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, வல்லிபுரம் மற்றும் சின்னம்மா, காலஞ்சென்ற இராசம்மா, தெய்வானை, அன்னலட்சுமி, செல்லம்மா, அன்னமுத்து, பரமேஸ்வரி, காலஞ்சென்ற செல்வமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹரி, யாதவ், வருண், யுதிகா, லக்ஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-01-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பு கல்கிசை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரிமாமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம். வட்டக்கச்சி வேவியன்ரியின் பிள்ளைகள் வாணி, கலா, சிவேஸ், அருள்,லலி