
யாழ். மானிப்பாய் அதிகார் செல்லமுத்து வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குலரத்தினம் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஷ்பராணி(Rtd. Teacher-St. Lawrence’s School- Wellawatte) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷினி(ஐக்கிய அமெரிக்கா), ரஜினி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகரன்(பொறியியலாளர்- ஐக்கிய அமெரிக்கா), வாகீசன்(பொறியியலாளர்- கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவிமனோன்மணி, காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், ஜெயநாதன், விஜயநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
நிர்த்திகா(ஐக்கிய அமெரிக்கா), விதுலன்(ஐக்கிய அமெரிக்கா), வினுத்தன்(ஐக்கிய அமெரிக்கா), யதுஷா(அவுஸ்திரேலியா), விதுஷன்(கொழும்பு), மிதுஷன்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அசாதாரண சூழ்நிலையால் நிகழ்வுக்கு அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது .
Our deepest sympathy to you and your family members. Vannan, Kala and Kids