எங்கள் அண்ணன் கோபு அண்ணன் உங்கள் துயரச் செய்தி கேட்டதுமே நெஞ்சம் எல்லாம் வெடிக்கிறதே விம்மி அழவும் முடியவில்லை நம்ப முடியவில்லை உங்கள் செய்தி எங்களை தவிக்க விட்டு விட்டு எங்கு தனிமையில் சென்றீரோ எங்களுக்கு நல்ல புத்திமதியும் சொல்வீரே வேலைதளத்தில் நகைச்சுவையும் செய்வீரே என் வீட்டில் வந்து நல்ல சமையல் செய்து தருவீரே என் வீட்டு அறையில் தங்கி விட்டு செல்வீரே வேலை நண்பர்கள் எல்லாம் செல்லமாக ஜீ என்று கூப்பிடுவர் நான் மட்டும் உங்களை அண்ணன் என்று கூப்பிடுவேன் ஏதும் கலவரங்கள் வந்துவிட்டால் கலகலப்பாய் கலைத்திடுவார் உங்கள் முகம் சிரித்த முகம் சிரித்துக் கொண்டே வேலை செய்வார் நண்பர்களை தவிக்க விட்டு எங்கு நீர் சென்றீரோ துடிதுடிப்பாய் திரிந்திடுவார் தொழில்கள் பல கற்றறிந்தார் அனைத்து தொழிலும் தெரியும் என்பார் பாட்டும் நல்லாய் படித்துடுவார் தாளம் நல்லாய் போட்டுடுவார் வேலை நல்லாய் செய்திடுவார் வேகமாக நடந்திடுவார் எப்ப நாங்கள் பார்க்கப் போறோம் மறுபடியும் எழுந்து வந்திடுவீர் உங்கள் முகம் பார்ப்பதற்கு ஏங்கி ஏங்கி நிற்கிறோமே கலகலப்பாய் திரிந்த நீங்கள் அமைதியை ஏன் விரும்பினீரோ உங்கள் ஆத்மா அமைதியத்தான் விரும்பியதோ உங்கள் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் சேர்ந்து பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்
Our heartiest sympathy goes to you and your family. Today your grief has touched us all. Let us share the pain together