Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 DEC 1952
இறப்பு 14 JUN 2024
அமரர் கந்தையா ஜெயநிதி 1952 - 2024 அச்சுவேலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:03/06/2025

யாழ். அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு பயித்தோலையை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா ஜெயநிதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவு தான் அப்பா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா!

பாசமாய் வளர்த்து பாரினிலே போற்ற
வழி காட்டினீர்கள் எமதருமை அப்பாவே!
ஓராண்டு அல்ல பல யுகம் கடந்தாலும்
ஏதோவொன்றாய் உனது வியாபகம் அப்பா

முன்நோக்கி ஓடுகின்ற காலத்தால் முடிவதில்லை
பின்நோக்கி ஓடுகின்ற நினைவுகள் நிறுத்த அப்பா
உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு
உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள்

பிரிவால் துயருறும் பாசமிகு
மனைவி, மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.!

தகவல்: குடும்பத்தினர்