3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா கணபதிப்பிள்ளை
(இராசரத்தினம்)
வயது 72
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி மடத்தடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கணபதிப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே!
பக்குவமாய் எமை வளர்த்து காத்து
கல்வி அறிவு தனை ஏற்றமுடன் அளித்து
வையத்துள் வளமாய் வாழ்ந்திட வைத்தீர்கள்!
நீங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய்
சொன்ன வார்த்தைகள்
என்றும்
எம் மனங்களில் வாழுதையா!!!
வானுலகம் சென்றாலும்
எம்
வழித்துணையாவும்
என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
நீங்கள் மறைந்து
மூன்று ஆண்டுகள் ஆனாலும்
இன்றும் என்றும் எம் நெஞ்சத்தில்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்குமையா!!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்