
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி மடத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் 18-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வடிவேலு, சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
றொபேக்கா(சுவிஸ்), சுதன்ராஜ்(ஜேர்மனி), கிருஷாந்(சுவிஸ்) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
சரஸ்வதி, தவமணி, மகேஸ்வரி, லீலா(கனடா), தவச்செல்வன்(கனடா), தவச்சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிக்குமாரன்(சுவிஸ்), சைலஜா(ஜேர்மனி), பானுஷா(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற இராசையா, சிறீதரன் ஆகியோரின் மைத்துனரும்,
மிதோஷ், அபிலாஷ், றொபீஸ் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் அச்சுவேலி வல்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.